தூத்துக்குடியில் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் பள்ளியின் தாளாளருமான சி.த செல்ல பாண்டியன், முன்னிலை வகித்தார் மாவட்ட  கல்வி அலுவலர் வசந்தா, பள்ளியின் தலைமையாசியர் ஜேக்கப் மனோகர் ஆகியோர் வரவேற்று பேசினர். மாணவர்கள் தேசதலைவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜர் போன்று முகமூடி அணிந்து பேரணி சென்றனர். பள்ளியின் முன்பு பேரணி துவங்கி மட்டக்கடை  1ம் கேட் வழியாக மாநகராட்சி வந்து பின்பு பள்ளியை வந்தடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் கிளாட்சன் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர்,நாட்டு நலப்பணி இயக்க பொறுப்பாசிரியர் பேட்ரிக் சாமுவேல், உடற்கல்வி ஆசிரியர் அதனாசியஸ், மதுரம், பட்டதாரி ஆசிரியர் செல்வின் ஜெயக்குமார் பால்ராஜ் ,ஜெயமணி, மனோ, போன்றோர் செய்திருந்தனர்