விருத்தாச்சலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அடுத்த எம் பட்டி கிராமத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு துப்பாக்கி வழங்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருத்தாச்சலம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக அக்கட்சியினர் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வருவதற்காக விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் ஒன்று திரண்டனர். இதுபற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான போலீசார் அங்கு திரண்டு சென்று ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். மேலும் தடையை மீறி சென்றால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் திருமாறன்  ,அய்யாயிரம், நீதிவள்ளல், முருகன் ,ராஜ்குமார் ,சுப்பு ஜோதி, திருஞானம், பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.                இதையடுத்து ஊர்வலத்தை கைவிட்டவர்கள் ஜங்ஷன் சாலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த தாசில்தார் கவியரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் முடிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை அடங்கிய மனுவை தாசில்தார் கவியரசு விடும் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதில் திமுக ,காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post