விபத்தை குறைக்க தேநீருடன் களமிறங்கிய போலீசார்

வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க தேனீர் கோப்பையுடன் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.  கடலூர் மாவட்டத்தில் சென்னை- திருச்சி( என் .எச் 45) சாலை மற்றும் கடலூர் -சேலம் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இங்கு டிரைவர்களின் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படுவதை உணர்ந்து டிரைவர்களுக்கு சூடான தேநீர் சாக்லேட் வழங்க முன்னாள் எஸ் பி சரவணன்         அறிவுறுத்தினார். இதனை வேப்பூர் மற்றும் ராமநத்தம் போலீசார் ஒரு வாரம் மட்டுமே செயல்படுத்தினர் பின்னர் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வேப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த விபத்துகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பெரும்பாலானவை அதிகாலையில் டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் இருந்ததால் ஏற்பட்டது தெரியவந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று அதிகாலை முதல் தேநீருடன் போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர் 2:00-  4:00 மணி வரை வேப்பூர் கூட்டு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களை முகம் கழுவ வைத்து தேனீர் வழங்கினர். மிகவும் சோர்வாக இருக்கும் டிரைவர்களை கட்டாயம் ஓய்வெடுக்க  அறிவுறுத்தினர். வேப்பூர் போலீசாரின் இந்த நடவடிக்கை மேற் பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.