ஓவியருக்கு விருது வழங்கி பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்


சுதந்திர தின விழாவில் ஓவியருக்கு விருது வழங்கி பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். இந்த ஆண்டு தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த ஓவியர் கலைஞருக்கான கலை நன்மணி விருதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஓவியக் கலைஞர் S.மோகன் குமார் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கி பாராட்டினார். விருது பெற்ற ஓவியரை கலிங்கபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சா. ராம்குமார்,ஆசிரியர்கள் மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ் குமார் ஆகியோர் பாராட்டினர்.