வேப்பூரில் வி சி க செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நல்லூர் ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ம. சாண்டில்யன்,  என் எஸ் பெரியசாமி , தமிழ்மணி வளவன் ,சூரிய கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வழக்கறிஞர்  மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருமாறன் ,தாமரைச்செல்வன், மா குரு, நீதி வள்ளல் ,செம்மல் ,காமராஜ், வழக்கறிஞர் இளையராஜா, பழக்கடை பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வருகிற 17-ஆம் தேதி அன்று பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அனைத்து கிளைகள் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மரக்கன்று நடுவது, மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சத்தியவான் நன்றி கூறினார்.