காஞ்சிபுரம் நன்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், நன்மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  இந்த கிராம சபைக் கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன், ஊராட்சி செயலர் வேலுச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். அதில் தனியார் லாரிகள் மூலம் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் வற்றி பாதிக்கப்படுவது, நன்மங்கலம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது போன்ற பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில்  குடியிருப்போர்  நலச்சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.