73 வது சுதந்திர தினத்தையொட்டி, ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலைப் பள்மரம்நடு விழாஇந்தியத் திருநாட்டின் 73 வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை, ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் (பொ) இரிச்சன் தலைமை தாங்கினார். விழாவில், தேசிய கொடியேற்றி அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. துணைத் தலைமையாசிரியர் கீதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.வி.பரமேஸ்வரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.மனோகரன், அன்னபூரணிநீலகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் எம்.எஸ்.ரோஸ், டி.கல்யாணசுந்தரம், வெற்றிவேல், பிரபுதாஸ், தனசேகர் மற்றும் ஆசிரியப் பெருமக்களும், மாணவ மாணவியரும் கலந்துகொண்ட இவ்விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பிக்கப்பட்டது.