ஆவல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 73 -வது சுதந்திர தின விழா

ஆவல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று 73 -வது சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்  பள்ளியின் தலைமையாசிரியர் சீ.குமாரசாமி  அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் மா.கணேசன் தலைமை வகித்தார், திருவேங்கடம் Lions club (gold)-ன் தலைவர் சுப்புராம், செயலாளர்  பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கண்காணிப்பு பொறியாளர் (ஓய்வு)  வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாரீஸ்வரி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியப்பெருமக்கள்,  பள்ளி மாணவ, மாணவியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி அமைப்பாளர் திருமதி.சித்ராபானு மற்றும் ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள சிறப்புடன் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் மா.கணேசன் அவர்கள் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவேங்கடம் Lions club (gold)-ன் சார்பாக பரிசு பொருட்களும், இனிப்பும் வழங்கப்பட்டது. இறுதியாக உதவி ஆசிரியை வ.முத்துலட்சுமி நன்றி உரையாற்றினார்.