திண்டுக்கல் சிவகிரிபட்டி கிராமத்தில் 144 பயனாளிகளுக்கு ரூ.5.44 இலட்சம் மதிப்பீட்டில் அரசின்  நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் சிவகிரிபட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 144 பயனாளிகளுக்கு ரூ.5.44 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் 

நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி அவா்கள் வழங்கினார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் சிவகிரிபட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவா் விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவா் பேசியதாவது:- தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மக்கள் தொடர்பு முகாம் இங்கு நடத்தப்பட்டுள்ளது. இம் முகாமின் நோக்கம் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துரைத்து அதன் மூலம் அவர்களை பயன் பெறச்செய்வதே இதுபோன்று மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும். மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்ததை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். மேலும் அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு சான்றிதழ்களை பெறுவது தொடர்பாக மனு அளிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அலையாமல் வீட்டில் இருந்தபடியும் மற்றும் இ-சேவை மையம் மூலமாகவும் பெறுவதற்கு அரசால் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மனுக்களின் நிலை குறித்து குறுந்தகவல்கள் உள்ளிட்ட வசதிகள் மூலமாக எளிதில் அறிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை எளிதில் 

பெறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.