சிறு வயலூர் கிராமத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பாசன குளம் தூர் வாரும் பணி துவக்கம் 

 

வேப்பந்தட்டை தாலுகா சிறு வயலூர் கிராமத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 5 - லட்சம் மதிப்பீட்டில் பாசன குளம் தூர் வாரும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியதாவது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாசன குட்டைகள் ஊரணிகளை சீர் செய்யும் வகையில் 126 சிறு பாசன குளங்களுக்கு ரூ 5 லட்சம் மதிப்பீட்டிலும், 407 குட்டைகள் மற்றும் ஊரணிகள் பணி என ரூ.1 லட்சம் மதிப்மீட்டில் தூர் வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் குடிநீர், மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (பொ) நாகரத்தினம், வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா,வேப்பந்தட்டை ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அறிவழகன், பெரம்பலூர் நில வள வங்கி தலைவர் சிவப்பிரகாசம், பெரம்பலூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரை கிருஷ்ணா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.