கழுதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 73 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திட்டக்குடி அடுத்த கழுதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 73 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ராஜகுமாரி தலைமை வகித்தார்.  உதவி ஆசிரியர் பத்மநாபன். முன்னிலை வகித்தார். இளநிலை ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். ஆடிட்டர் பழமலை தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் குறித்து பேசினார். 

மாணவர்களுக்கு  மாறுவேடம்  பாட்டு  பேச்சுப் போட்டிகள்  கட்டுரை போட்டிகள்  நடனம்  உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள்  நடந்தன. கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் ,100% வருகை தந்த மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ,பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ,பொதுமக்கள் பங்கேற்றனர். இதேபோல் சிறுகரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்ரா கொடி ஏற்றினார். உடன் ஆசிரியர் ஜெயகாந்தன்.  சம்பத் ,           நேரு இளைஞர் நற்பணி மன்றம் ,ஆளம் விழுதுகள் சமூக நல அமைப்பு குழுவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பாசார் சாவடி முன்பு   இளைஞர்கள் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடினர்.