அல்லாஹு அக்பர் சொல்லி! தேசிய கீதம் முழங்க! திருப்பூரில் சுதந்திரதினம் கொண்டாடிய இஸ்லாமியர்கள்


வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=ZSQ6SL0uQ9w&feature=youtu.be


அல்லாஹு அக்பர் சொல்லி! தேசிய கீதம் முழங்க! திருப்பூரில் சுதந்திரதினம் கொண்டாடிய இஸ்லாமியர்கள் ! விழா கொண்டாடினார்கள். திருப்பூர் காங்கேயம் ரோடு வள்ளியம்மை நகரில் உள்ள இல்முன் நாஃபியா ஜாமாத் சார்பில் , அந்த பகுதியில் உள்ள பள்ளி வாசலில் மத நல்லிணக்க சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கொடி தோரணங்கள், தேசப்பற்று பாடல்கள் என பள்ளிவாசல் வீதியே களை கட்டியது. பள்ளிவாசல் இமாம் அஹ்மதின் முன்னிலையில் திருப்பூர் தெற்கு எம் எல் ஏ குணசேகரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். பள்ளிவாசலில் தேசிய கீதம் முழங்கவும், அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் சொல்லியும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல் இமாம் அஹ்மதின் முன்னிலையில் திருப்பூர் தெற்கு எம் எல் ஏ குணசேகரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். காதர்பேட்டை பள்ளிவாசல் இமாம், முகமது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார். பள்ளிவாசலில் தேசிய கீதம் முழங்கவும், அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் சொல்லியிம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வள்ளியம்மை நகர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் முனாப், செயலாளர் நஜ்முதீன், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துசாமி, கண்ணப்பன் , உள்பட இந்த விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டனர்.