நத்தம் பகுதியில் ஊருக்குள் நுழைந்த காட்டுமாடுகள்

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அழகர் கோயில் ,கரந்தமலை உள்ளிட்ட மலைப்பகுதியில் மழைநீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் இல்லாமல் தண்ணீரை தேடி காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.நேற்று வனப்பகுதியிலிருந்து வந்த காட்டுமாடு தனது 6 மாத மதிக்கத்தக்க குட்டியுடன் நத்தம் சந்தன கருப்பர் கோயில் அருகே உள்ள மாந்தோப்பில்  காலை  நுழைந்தன. இதை பார்க்க  பொதுமக்கள் கூடியதால்  காட்டுமாடு மிரட்சியுடன் காணப்பட்டது. அங்கிருந்து நெடுஞ்சாலை அலுவலகம் வழியாக வேலம்பட்டி கிராம உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரண்டு ஓடியது பின்னாலேயே பொதுமக்கள், விவசாயிகள் விரட்டி சென்று விரட்ட முயன்றனர் ஆனால்  முடியவில்லை. நத்தம்  வனச்சரக அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான வனவர்கள் பாஸ்கரன்,முருகன்  உள்ளிட்ட வனத்துறையினர் ஊருக்குள் இருந்த காட்டுமாடுகளை 4 மணி நேர போராட்டத்திற்குப்பின்   அருகே உள்ளவனப்பகுதிக்குள் சேர்வீடு பகுதி வழியாக கரந்தமலை வனப்பகுதியில் விரட்டிவிட்டனர்.