திட்டக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் போலீஸ் குவிப்பு

திட்டக்குடி அடுத்துள்ள வையங் குடியில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோயிலில் நேற்றுமுன்தினம் திருவிழா நடைபெற்றது. இதில் வையங் குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பிரிவினர் கலந்துகொண்டு தேர்வடம் பிடிக்க சென்றனர் அப்போது மற்றொரு பிரிவினர் அவர்களை வடம் பிடிக்கக் கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது திருவிழா முடிந்த நிலையில் வடம் பிடிக்க சென்ற தரப்பினர் இது சம்பந்தமாக திட்டக்குடி வட்டாட்சியர் புகழேந்தியிடம் புகார் மனு அளித்து விட்டு ஊர் திரும்பினர். அப்போது எதிர் தரப்பினர் வழிமறித்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.  இதில் வயங்குடி காலனியைச் சேர்ந்த இளவரசன்( 63 )சேகர் (43) ஆகியோர் காயமடைந்தனர். அப்போது அங்கு சென்ற  தென்னரசு என்பவரின் மனைவி செல்வம்பால்( 35 ), சங்கர் என்பவரின் மனைவி முத்தழகி( 35) ஆகியோரும் தாக்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற திட்டக்குடி டிஎஸ்பி (பொறுப்பு) மாரியப்பன் திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா. ஆவினன்குடி போலீசார் வையங்குடி  கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சென்று இருதரப்பினர் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வையங்குடி  கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.