ஈரோடு: 019 ஆம் ஆண்டிற்கான அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருது!

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில்
2019 ஆம் ஆண்டிற்கான அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருது
வழங்கப்பட்டது. கோவை கற்பகம் உயர் கல்வி அகாதமியின் உதவிப்
பேராசிரியர் முனைவர் எஸ். பாஸ்கர் அவர்களுக்கு ரூபாய் ஒரு
லட்சத்துடன் ஜி.டி நாயுடு விருதினை பெரியார் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் அவர்கள் வழங்கினார்.
மேடையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிங்கப்பூர் – முஸ்தபா
வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் , பி.கே.பி.
அருண் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த. ஸ்டாலின்
குணசேகரன் ஆகியோர்.