திருப்பூரில் யூனியன் வங்கியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறு குறு தொழில் முனைவோருக்கான வாடிக்கையாளர் கலந்துரையாடல்
 

வீடியோ இணைப்பு: https://www.youtube.com/watch?v=xpsKQcXTihE&feature=youtu.be

 

யூனியன் வங்கியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறு குறு தொழில் முனைவோருக்கான வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. யூனியன் வங்கி தனது நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு சிறு குறு தொழில் முனைவோருக்கான வாடிக்கையாளர்களின் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மண்டலம்  சார்பாக திருப்பூரில் உள்ள தனியார் அரங்கில்  நடைபெற்றது. இதில் கோவை மண்டல துணை பொதுமேலாளர் வேகா ரமேஷ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.  உதவி பொதுமேலாளர் ஹனுமந்த ரெட்டி சிறு குறு தொழில் மைய திருப்பூர் மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

நிகழ்ச்சியில் சிறு குறு தொழில் முனைவோருக்கான யூனியன் வங்கியின் நீண்ட கால வாடிக்கையாளர்கள் டீலஸ் நிட்டிங் மில், அருண் கார்மெண்ட்ஸ், ட்ரைக்கோ குளோபல் ட்ரேடு, அமோக நிட்டிங் மில் மற்றும் சாந்தி திருமூர்த்தி கணேசன்  உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டர். இதில்  யூனியன் வங்கியின் சிறு குறு தொழில் துவங்குவதற்கான திட்டங்கள் மற்றும் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வங்கி அலுவலர்கள் வாடிக்கையாளர்களுக்கு  விளக்கமளித்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் ஆணையும் வழங்கப்பட்டது.