காஞ்சிபுரம் வேங்கை வாசல் முதல் நிலை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் வேங்கை வாசல் முதல் நிலை ஊராட்சியில், தனி அலுவலர் தலைமையில், பற்றாளர் மனோகரன், ஊராட்சி செயலர் ரூபன் ஆபிரகாம் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மழை நீர் சேகரிப்பு நடவடிக்கை, தனியார் லாரிகள் மூலம் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் வற்றி பாதிக்கப்படுவது மற்றும் பொது மக்களின் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.