பெண்ணாடம் அருகே சுதந்திர தினத்தன்று நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு 

பெண்ணாடம் அருகே உள்ள திடீர் குப்பம் கிராம பொதுமக்கள், அடிப்படை வசதி நடை பாதை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மாவட்ட செயலாளர் கோகுல ஸ்டீபன் ,மாவட்ட குழு உறுப்பினர் பானுமதி தலைமையில் கடந்த 9ம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் புகழேந்தியிடம்  மனு அளித்தனர். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இல்லை என்றால் 15 தேதி நாளை வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி உண்ணாவிரதம் போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர் அதன்பேரில் திடீர் குப்பத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் துணை தாசில்தார் ரவிச்சந்திரன் பொறுப்பேற்று ஒரு மாத காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததுள்ளார் இதனை ஏற்ற பொதுமக்கள் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். இதில் மாவட்ட செயலாளர் கோகுல ஸ்டீபன் ,மாவட்ட குழு உறுப்பினர் பானுமதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.