குரோம்பேட்டை போக்குவரத்து காவல் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல், எஸ்13 குரோம்பேட்டை போக்குவரத்து காவல் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடைபெற்ற முகாமில், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் அன்வர்பாஷா, ஆய்வாளர் ஆனந்தஜோதி, உதவி ஆய்வாளர் ரங்கநாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்று, ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதின் அவசியம் மற்றும் சாலை விதிகளை மதித்தல் போன்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை விளக்கி, துண்டு பிரசுரங்களை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் வழங்கினர்.