மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை : அரசியல் தலைவர்களிடம் மனு


மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழகத்தின் இயற்கை வளம் கனிமவளப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராம.சேயோன் இணை ஒருங்கிணப்பாளர் இரா.சுரேஷ் துணை ஒருங்கிணைப்பாளர் பூ.அறிவொளி மற்றும் மக்கள் தொடர்பாளர் சௌ.சிவச்சந்திரன் ஆகியோர் சந்தித்து மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தக் கோரி மனு கொடுத்தனர். மேலும் இதே கோரிக்கை அடங்கிய மனுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கும் வழக்கறிஞர்கள் அனுப்பி வைத்தனர்.