கால தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து மாணவ மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கினார்: அமைச்சர் செங்கோட்டையன் 

சென்னை பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட 6 அரசு அங்கிகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்புக்கு மாணவ மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோடையன் மதியம் 2:00 மணி வருவதாக இருந்தது. அவரை உற்சாகமாக வரவேற்க மதியம் 2:00 மணியிலிருந்து மாணவ மாணவிகள் காத்திருந்தனர்,  மாலை 6:00 மணி ஆகியும் அமைச்சர் வரவில்லை

வரவேற்ப்பு அளிப்பதற்க்காக காத்திருந்தால் மாணவ மாணவிகள் சோர்வடைந்தனர்.  மாணவ-மாணவிகள் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் பள்ளிகளுக்கு குவிந்தனர். அதன் பிறகு 6:30மணி அளவில் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தடைந்தார். முதலில் காலதாமதம் ஆனதற்கு நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் தமிழகத்தில் மாணவர்களுக்கு ஒரே ஆண்டில் 15 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு மடிக் கணினி வழங்கும் வரலாறு நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசு அனுமதி பெற்று 8 .9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20 லட்சம் டாப் (TAB)வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி அதற்கான பணிகளை பள்ளி கல்வி துறையில் நாங்கள் ஆற்றி வருகிறோம் என்று இவ்வாறு பேசினார்.
 


 

 

Previous Post Next Post