மாநில அளவிலான யோகாசன போட்டி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா கல்யாண மண்டபத்தில் 32 வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200 மாணவ மாணவியர் பங்கேற்றனர் இதில் தனியாள்,குழு, ரிதமிக், ஆர்ட், டிஸ்டிக் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது .கோவை அணியினர் முதலிடமும், காஞ்சிபுரம் அணியினர் இரண்டாமிடமும், விருதுநகர் அணியினர் மூன்றாமிடமும் பெற்றனர் .அகஸ்தியா குழுவினர் போட்டி அமைப்பாளர் குணசேகரன்,மாநில பொதுச்செயலாளர் யோகி ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.ஈரோடு மாவட்ட தலைவர் யோகா துரைராஜ் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.