மதுரை மாநகர் காவல்துறை சார்பாக குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

மதுரை மாநகர் காவல்துறை சார்பாக குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மதுரை மாநகர் காவல்துறை சார்பாக குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக பேரணி நடைபெற்றது. இதில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி  தல்லாகுளம் மற்றும் அண்ணாநகர் காவல் சரகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முதல் காந்தி அருங்காட்சியகம் வரையும், திலகர்திடல் மற்றும்  நகர் காவல் சரகத்தில் உள்ள சிம்மக்கல் முதல் சம்பள மற்றும் கணக்கு அலுவலகம் வரையும், திருப்பரங்குன்றம் காவல் சரகத்தில் உள்ள  அண்ணா பூங்காவிலுருந்து சீதாலெட்சுமி பள்ளி வரையிலும் மற்றும்  வில்லாபுரம் தோரண வாயிலிலிருந்து பெரியார் சிலை வரையும் இந்த பேரணி நடைபெற்றது.இதில் மாணவ மாணவிகள் காவல்துறையினர் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.