லக்கம்பட்டி  பேரூராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


 


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட லக்கம்பட்டி  பேரூராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது,  இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார், லக்கம்பட்டி பேருராட்சி முன்னாள் தலைவர் வேலுமணி, சொசைட்டி தலைவர் டி. குறிஞ்சிநாதன் , பேரூர் கழக செயலாளர் கே.ஏ.ஈஸ்வரமூர்த்தி, வார்டு செயலாளர், கருப்புச்சாமி,கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.