மேல்நிலைத் தொட்டிமற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்


 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை ஊராட்சியில் மேல்நிலைத் தொட்டிமற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளா்கள் சந்திப்பின் போது. உள்ளாட்சி தேர்தல் தடை கோரி திமுக தரப்பில் தொடுத்துள்ள வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பரில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 38 எம்பிக்களை பெற்றுள்ளார். 38 எம்பிக்களால் மக்களுக்கு 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை திமுக தமிழகத்தில் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு நூறு சதகிதம் வாய்ப்பில்லை. பால்விலை உயா்வு கட்டுபடியாவில்லை என பால் உற்பத்தியாளா்கள் அவா்களது கருத்தை தொிவித்துள்ளனா். முதல்வா் சாியான நடவடிக்கை எடுப்பாா் எனவும் உதகையில் அனுமதியின்றி கட்டிடங்கள் இல்லை அதனால் நிலச்சாிவு ஏற்படவில்லை அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கருப்பணன் தொிவித்துள்ளாா். இதில் பவானி ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ,மாவட்ட அண்ண தொழில் சங்க தலைவர் ஜான், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.