விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மையானதாக செயல்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி


விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மையானதாக செயல்படுகிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பேற்ற சுதாகர், துணைத்தலைவர் கணேச பாண்டியன் ஆகியோரை வாழ்த்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,:-தமிழகத்திலேயே விவசாயிகளுக்கு அதிக பயிர்க்கடன் வழங்குவதில் முதன்மையாக உள்ள கூட்டுறவு வங்கியாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம், தொடர்ந்து அரசு மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மற்றும் பயிர்க்கஞன், விவசாயக்கடன் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பாக செயல்படுவதற்கு அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள்  உறுதுணையாக இருப்பார்கள்" என்றார். இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.