செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் பணியகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 



காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் செங்கை மறைமாவட்டத்தின் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் பணியகம் சார்பில் மத்திய அரசு தாழ்த்தப்பட்ட கிரித்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சோர்க்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருவதை கண்டித்து செங்கை மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் துக்க நாள் பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியரசு தலைவரின் அணை 1950ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சம்மந்தமாக கொண்டு வரப்பட்டதில் 3வது பத்தி அரசிய்டல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது. மதத்தின் அடைப்படியில் தாழ்த்தப்பட்டோரை இந்த ஆணை பாகுபாடு செய்வதால் பலதரப்பிலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இதனால் இந்த ஆணை கடந்த ஆண்டுகளில் இருமுறை திருந்தப்பட்டு சீக்கிய மதத்தை தழுவியவர்களையும், புத்த மதத்தை தழுவியவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆணை பிறப்பிக்கப்பட்டதிலிருந்தும், தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களை மட்டும் இன்னும் புறக்கனைத்து வருகின்றனர். மத்திய அரசு தாழ்த்தப்பட்ட கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சோர்க்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது. கிறித்துவர்களுக்கு எதிராக ஆணை பிறப்பிக்கபட்ட இந்த நாளை துக்க நாளாக அனுசரிக்கின்றனர். இதில் செங்கை மறைமாவட்டத்தில் உள்ள நைத்து தேவாலயங்களில் இருந்து பிரதிநிதிகளும், கிறித்துவ குருக்களும், துறவிகளும் பங்கேற்கின்றனர். தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

 



 

Previous Post Next Post