வளையல் அலங்காரத்தில் கொண்டத்து காளியம்மன்

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=lqItMqOdOwM&feature=youtu.be


திருப்பூரில் புகழ்பெற்ற பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொண்டத்துக் காளியம்மனுக்கு வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படு பூஜைகள் அன்னதானம் என்று விமர்சியாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் இன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீ கொண்டத்துக்காளியம்மனுக்கு வண்ண வண்ண வளையல்களால் மாலைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகமும் தீபாராதனையும் செய்யப்பட்டது. அம்மனை தரிசிக்கை காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.