திருப்பூர் பகுதிகளில் எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் 


திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு ராஜவீதியில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாநகராட்சியிலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு ராஜவீதியில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வீடாகச் சென்று எம் எல் ஏ., சு.குணசேகரன் துண்டு பிரசுரங்களை வழங்கி ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு அவசியத்தை எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 3வது மண்டல உதவி ஆணையாளர் சபியுல்லா, உதவி பொறியாளர் முனியாண்டி, அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணப்பன், பேபி பலனிசாமி, சுகாதார அலுவலர் பிச்சை மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகள் கன்னாபிரான், சாகுல்ஹமீது, சுப்ரீம் ராதாகிருஷ்ணன், ராஜவீதி ஜவகர்ராஜ்,  சுபான் பாய், சரவனன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுவை  பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., சு.குணசேகரன், மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.