மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரி சீனாவின் லீன்னி டாப் வளையதளம் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.எல்.என். பொறியியல் கல்லூரி சீனாவின் முன்னணி தகவல் தொழில்துறை நிறுவனமான லீன்னி டாப் வளையதளம் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் சீனாவின் முன்னணி தகவல் தொழில்த் துறை நிறுவனமான லீன்னி டாப் வளையதளம் கம்பெனியுடன் (Linyi Top Network Company Limited, China)  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் கே.எல்.என். பொறியியல் கல்லூரி மாணவர்கள் சீனாவில் உள்ள லீன்னி டாப் வளையதல கம்பெனியில் 30 நாட்கள்  கல்லுரியின் ஒவ்வொரு செமஸ்டர் விடுமுறை நாட்களில்  தொழில் பயிற்சி பெறுவார்கள். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர், முனைவர் ராம்பிரசாத் வரவேற்பு உரையாற்றினார். திட்டம் ஒருங்கிணைப்பாளர், கணேஷ் குமார்  தொழில் பயிற்சி சிறப்பினை எடுத்துத் துரைத்தார். கல்லூரியின் தலைவர் கார்த்திக் மற்றும் கல்லூரியின் செயலாளர் கணேஷ் நிகழ்ச்சியினை தலைமை வகித்தனர். இதில் லீன்னி டாப் வளையதளம் நிறுவனத்தின் மேலாளர், ஹுவாங் லிமிங் மற்றும்  வணிக  ஆய்வாளர் கல்பனா பெஹரா, சிறப்புரையாற்றினர். தகவல் தொழில்நுட்பம் துறை தலைவர், முனைவர்  அழகேஸ்வரன் நன்றி உரையாற்றினார்.