பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறை கேட்புக் கூட்டம்: ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்குதல் தொடர்பாக வட்ட அளவிலான மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது குறைதீர்க்கும் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 10.8. 2019 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்தப்பட உள்ளது .இப்பணியை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள் பார்வையாளர்களாக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வட்டாட்சியர், கூட்டுறவு சங்கங்களில் சார்பதிவாளர் ,கூட்டுறவு சங்க செயலாளர், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொதுவிநியோக திட்ட நியாயவிலை கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பான தங்கள் கருத்துக்களை வருகை தரவுள்ள அலுவலர்களிடம் நேரில் தெரிவித்தும், மனுக்களை அளித்தும், அதற்கான தீர்வுகளை பெற்று பயன்பெறுமாறு  தெரிவித்துள்ளார்.கூ ட்டம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. ஈரோட்டில் திண்டல் நியாய விலை கடை புதுக்காலனி திண்டல் என்ற இடத்திலும், பெருந்துறை முருங்கத்தொழுவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்திலும் ,பவானி குப்பிச்சிபாளையம் நியாய விலை கடை வளாகம், கோபிசெட்டிபாளையம் அளுக்குளிகிராமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், சத்தியமங்கலம் முடுக்கன் துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,அந்தியூர் ஒட்டப்பாளையம் நியாய விலை கடை வளாகத்திலும், மொடக்குறிச்சி ஈஞ்சம் பள்ளி நியாய விலை கடை வளாகத்திலும், கொடுமுடி ஆவுடையார் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், தாளவாடி தலமலை கிராமம் நியாய விலை கடை முறியனூரிலும், நம்பியூர் ஆண்டிபாளையம் பஞ்சாயத்து வளாகத்திலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்...

Previous Post Next Post