கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டுத் தீர்வை வாங்காததை கண்டித்து ஆர்.டி.ஓ., ஆபிசில் காத்திருப்பு போராட்டம் நடந்தது

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டுத் தீர்வை வாங்காததை கண்டித்து ஆர்.டி.ஓ., ஆபிசில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.


துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ளது வீரவாஞ்சி நகர் மேற்கு பகுதி. இது மணியாச்சி பஞ்சாயத்தில் உள்ளதா, கோவில்பட்டி நகராட்சியில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும், வீட்டுமனைப்பட்டா, குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை மற்றும் மின்சார வசதி செய்து தர வேண்டும். கடந்த  2011ம் ஆண்டிலிருந்து வீட்டுத் தீர்வை வாங்க மறுப்பதை கண்டித்தும், உடனடியாக இங்குள்ள வீடுகளுக்கு வீட்டுத் தீர்வை வாங்க  வலியுறுத்தியும்,  வீரவாஞ்சி நகர் மேற்கு பகுதியை சேர்ந்த மக்கள்,நேற்று கோவில்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து போராட்டக்காரர்களிடம், ஆர்.டி.ஓ., விஜயா பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்தில், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கு தீர்வை ரசீது மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்பு கொண்டார். இதையடுத்து போராட்ட குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.