எளம்பலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி


பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன்

தலைமை வகித்து மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100 - மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் அன்பழகன் அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் நன்றி கூறினார்