பெரம்பலூர் வேப்பந்தட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வேப்பந்தட்டை ஊராட்சியில் 73. வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 100 .நாள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், வேப்பந்தட்டை தாலுகா தலைமையிடமாக கொண்டு 29 ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கி, நீதி மன்றம், மகளிர் சுய உதவிக் குழு அலுவலகம் , வேளாண் விரிவாக்க மையம், நெடுஞ் சாலைத்துறை அலுவலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என் இந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை செய்து முடித்திட தாலுகா தலைமையிடமான வேப்பந் தட்டைக் கு சுமார் 500 பேர்வந்து செல்கின்றனர் ஆனால் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை வசதிகள் செய்யப் படவில்லை என மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். உடனே நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தின் முடிவில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நட்டார். கூட்டத்தில் திட்ட இயக்குனர் நாகநத்தினம், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன்,  உதவி இயக்குனர் ஊராட்சிகள் மகாலிங்கம், வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், இளங்கோவன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.