இணைப்பு பாலம் கட்டபூமி பூஜை: எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் நடத்தி வைத்தார்

பல்லடம் மங்கலம் ரோடு,  அரசு கலைக்கல்லூரி எதிரில்  உள்ள சாலையில் கழிவுநீர்,  கால்வாயில் செல்லும் வகையில் ரூ .11.25 லட்சம்  மதிப்பீட்டில் இணைப்பு பாலம் கட்ட எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் பூமி பூஜை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நித்தியானந்தம், பொறியாளர் அருண் கார்த்திக், பல்லடம் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார்,  பொறியாளர் சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்ப்பந்தல் நடராஜன், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், உழவர் பணிக்கூட்டுறவு சங்கத்தலைவர் ராமமூர்த்தி, மற்றும் அண்ணா திமுக ந்நிர்வாகிகள் வைஸ் பழனிசாமி, கரைபுதூர் விஸ்வநாதன் தங்கவேல், தர்மராஜன், தமிழ்நாடு பழனிச்சாமி, லட்சுமணன்,  சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்