சிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு பாஜகவின்  அப்பட்டமான சட்டமீறல்: கே எஸ் அழகிரி பேச்சு 


 


சிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு  என்பது பாஜகவின்  அப்பட்டமான சட்டமீறல் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில். ஐ.என். எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம்  மீது முதல் தகவல் அறிக்கை  இல்லை. அது இல்லாமல்  சிதம்பரத்தை கைது செய்வதோ அல்லது அவருக்கு ஜாமீன் மறுப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என்றார்.  உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட சிதம்பரம்  உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தான் சிதம்பரம் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வீட்டுக்கு சென்று அவர் இல்லத்திலே இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டை வைத்து அவர் தலைமறைவாகி விட்டார் என்று ஒரு உருவகத்தை அவர்கள்  தோற்றுவிக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் என்ன வேடிக்கை என்றால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை அடுத்த அமர்வுக்கு மாற்றியது.ஆனால்  அடுத்த அமர்வு ரமணா அமர்வு அவர் மீண்டும் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கை விசாரிக்க அனுப்புகிறார். எனவே உச்ச நீதிமன்றம் என்பது வழக்கை விசாரிப்பதற்கு தான் அவர்களுக்கு நன்றாக தெரியும் இதில் அரசியல் உள்ளது சிதம்பரம் மீது குறி வைக்கிறார்கள் எனவே இதில் தவறான தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் 2 அமர்வுகளும் அந்த வழக்குகளை விசாரிக்க தயங்குகின்றன. இதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பாஜக ஒரு சர்வாதிகார இலக்கை நோக்கி செல்கிறது. காங்கிரஸ்  கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இதனை மேற் கொண்டுள்ளனர். ஜனநாயகம் நிச்சயம் வெற்றி பெறும் என இவ்வாறு கூறினார்.


 

 

Previous Post Next Post