கோபியில் கிறித்தவ நற்செய்திக் கூட்டம்

கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிறிஸ்தவ நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோபி கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் பாதிரியார் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கி யாரையும் கட்டாய மதமாற்றம் செய்யக்கூடாது என்று பேசினார்.அதைத் தொடர்ந்து போதகர் ஹாரி கோம்ஸ் நாட்டில் மழை பெய்ய வேண்டியும், குடிப்பழக்கம் உள்ள கிறிஸ்தவர்கள் அதில் இருந்து விடுபட்டு நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று விசேஷ பிரார்த்தனை நடத்தினார்.இரண்டு நாட்கள் நடந்த இந்த நற்செய்திக் கூட்டத்தில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பாதிரியார் சந்தோஷ் காந்தி சிறப்பாக செய்திருந்தார்.