சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73-வது சுதந்திர தின விழா

சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73-வது
சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் வட்டார
வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வி.கஜேந்திரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பி.செல்வமுத்து வரவேற்புரையாற்றினார். உதவி பொறியாளர்கள்
ம.முத்துக்குமார் இரா.தாரா ஜெ.அருமைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
செலுத்தி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் தேர்வு
அட்டை பேனா ஆகியவற்றை வழங்கினார். 20 ஆண்டு பணிக்காலத்தில் எவ்வித
விபத்துமின்றி எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாத சிறப்பாக வாகனம் ஓட்டி பணிபுரிந்தமைக்காக சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பு 
ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ஆர்.ராஜசேகருக்கு 4 கிராம் (22 காரட்) தங்க பதக்கத்தை
சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி வழங்கி பாராட்டினார். வட்டார வளர்ச்சி அலுவலர்
(கி.ஊ) பா.ரெஜினாராணி நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி
ஒன்றிய அலுவலக ஊழியர்கள்ரூபவ் மகளிர் குழு களப்பகுதி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் வசந்தி ஆகியோர் செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செய.ராசமாணிக்கம் சீர்காழி அ.தி.மு.க நகர கழக செயலாளர் பக்கிரிசாமி வைத்தீஸ்வரன்கோவில் பேரூர்  கழக செயலாளர் போகர் ரவி சீர்காழி நகர அம்மா பேரவை செயலாளர் ஏ.வி.மணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினார் பூராசாமி ஒப்பந்தக்காரர் மாமல்லன் ரவிசண்முகம் பரணிதரன் சீர்காழி
ஒன்றிய அ.தி.மு.க மாணவரணி செயலாளர் திருமாறன் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்
மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.