திருப்பூர் பாரதிய வித்யா பவன் பள்ளி சார்பில்  110 மீட்டர் பிரம்மாண்ட தேசியக்கொடி ஊர்வலம் 

இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, தேசியக்கொடியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக வும் திருப்பூர் பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் 400 பேர் 110 மீட்டர் நீள தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். 


திருப்பூர் பாரதிய வித்யா பவன் பள்ளி சார்பில் தேசிய கொடியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக வும், இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 110 மீட்டர் பிரம்மாண்ட தேசியக்கொடி ஊர்வலம் திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பள்ளி தாளாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் 200 மாணவ மாணவிகள், 50 ஆசிரியர்கள், 150 பெற்றோர்கள் என 400 பேர் பிரம்மாண்ட 110 மீட்டர் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து, தாராபுரம் ரோடு வழியாக, புதூர் பகுதிக்கு வந்தடைந்தது. பிரம்மாண்ட மூவன்ன தேசியக்கொடி ஊர்வலம் நீளமாக கண் கவர் மூவன்னத்தில் இருந்ததால் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். சுதந்திர தின விழா வர உள்ள நிலையில் இந்த 110 மீட்டர் தேசியக் கொடி ஊர்வலம் பொதுமக்களிடம் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என தெரிவித்தனர்.  


Previous Post Next Post