வேலூர் தேர்தலில் 72 சதவீதம் வாக்குப்பதிவு

வேலூர் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பதுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு  காலை 7 மணிக்கு தொடங்கி மலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த நிலையில் வேலூர் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-  வேலூர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 72% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவின் போது பணம் கொடுத்ததாக ஒரு புகார் கூட வரவில்லை. வேலூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 8.40க்கு தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.நாளை அதிகாலை வரை வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக தாசில்தார்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த முறை மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் இடி தாங்கி வைக்கப்பட்டுள்ளது. லத்தேரி, குடியாத்தம் பகுதிகளில் சில தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை விடாமல் இருப்பதாக புகார் வந்த அடிப்படையில் அதிகாரிகள் அங்கு சென்று அந்த தனியார் நிறுவனத்தை மூடினார்கள். வாக்குப்பதிவில் கன்ட்ரோல் இயந்திரங்கள் 2 மற்றும்  22 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுதானது. தேர்தலில் மொத்தம் 3 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரத்து 120 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர் மண்டப விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் மனிதாபிமான அடிப்படையில் ஒரு திருமணத்துக்காக திறக்கப்பட்டு பின்னர் மீண்டும் மூடப்பட்டது. வாக்குப்பதிவு பணியில் 240 அலுவலர்கள் ஆப்சென்ட் ஆனார்கள். நான் சென்னையில் பணியாற்றிய போது ஓட்டுப் போட்டுவிட்டு தற்போது இங்கு வேலூரிலும் ஓட்டு போட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது தேர்தல் ஆணைய விதிமுறைப்படி வாக்காளர் பட்டியலில் எந்த தொகுதியில் பெயர் உள்ளதோ அந்த தொகுதியில் வாக்களிக்கலாம் சென்னையில் நான் பணியாற்றியபோது தேர்தலில் ஓட்டுப் போடவில்லை தற்போது இங்கு பணிமாறுதல் வந்ததால் எனது பெயர் வேலூர் தொகுதிக்கு மாற்றப்பட்டு இன்று வாக்களித்தேன் இவ்வாறு கூறினார்.

Previous Post Next Post