கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்கு 135 நாட்களுக்கான பாசன நீரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆகியோா் தண்ணீா் திறந்து வைத்து வாய்க்கால்களில் சீறிப்பாய்ந்த தண்ணீரை மலா் தூவி வணங்கினா். இதனால் கோபி செட்டிபாளையம் அந்தியூா் பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் 24504 ஏக்கா் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. பின்னர் செய்தியாளர் சந்திப்பில்

கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் இன்று முதல் தொடர்ந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தடப்பள்ளி 300 கன அடியும் அரக்கன்கோட்டை 400 கன அடியும் தண்ணீர் திறப்பு. மாயா ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாளவாடியில் மழைக்காலங்களில் தண்ணீர் கர்நாடக அணைக்கு செல்கிறது இதற்கு தடுப்பணை கட்டுவதற்கு அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும். மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை சரி செய்த பின்னரே முடியும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை விவசாய சங்க தலைவர் சுபி.தளபதி,முன்னாள் சிட்கோ சேர்மன் சிந்து ரவிச்சந்திரன் ,வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் ,மாவட்ட துணைச் செயலாளர் சுலோச்சனா நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம்,ஓ. எஸ்.மனோகரன், சிறுவலூர் மனோகரன், ஆசிரியர் வேலுச்சாமி ,ஊராட்சி கழக செயலாளர் மணி என்கிற வெள்ளிங்கிரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா திருமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.