ஈரோடு மாவட்ட எஸ்.பி அதிரடி: 133 ரவுடிகள் கைது 

தமிழக காவல் துறை இயக்குனர்,கூடுதல் காவல் துறை இயக்குனர்,சட்டம் ஒழுங்கு, சென்னை காவல்துறை தலைவர், மேற்கு மண்டலம், கோவை மற்றும் காவல்துறை துணைத்தலைவர், கோவை சரகம்,  ஆகியோர்களது உத்தரவின்பேரில்  ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் 133 ரவுடிகள் கைது செய்யப் பட்டுள்ளனர் . இதில் 51 நபர்கள் மீது குற்ற வழக்குகளும், 64 நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 109 மற்றும் 110 கு.வி.மு.ச.விலும் நன்னடத்தை உறுதிமொழியும் 18 நபர்கள் மீது குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தெரிவித்துள்ளார்.