தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் : ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் : ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜா என்பவரை சமூக விரோதிகள்  கடைக்குள் வைத்து படுகொலை செய்தனர். இதனைக்  கண்டித்து தமிழகம் முழுவதும் தொமுச, பாரதீய மஸ்த்துர் சங்கம், AITUC, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் அவருடைய  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டியும் இதுவரை நடந்த கொள்ளை கொலை ஆகியவற்றுக்கு நீதி விசாரணை நடத்தக்கோரியும் விற்பனை ஆகும் பணத்தை சென்னை மண்டலத்தைப் போல் இரவு 8 மணிக்குள் வசூல் செய்ய வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு எங்களுக்கு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  138 டாஸ்மாக் கடைகளும் இன்று ஒருநாள் அடைக்கப்பட்டன.