பழனியில்  இந்திய குடியரசு கட்சியின் சார்பாக  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பழனி  குளத்து ரவுண்டானாவில் இந்திய குடியரசு கட்சியின் சார்பாக புதிய கல்விக் கொள்கை திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து வரும் நபர்களை கௌரவ கொலை என்ற பெயரில் நடக்கும் சாதி ஆணவ படுகொலையை தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி உடனடியாக தடுத்து நிறுத்தவும் தமிழ்நாட்டில் சாதியை மறுத்து திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்திடவும் அவர்களுக்கு என்று தனியாக சட்டம் இயற்றி அவர்களுக்கு அரசு வேலை, சிறப்பு நிதி உதவித் திட்டம்,அரசின்  இலவச வீடுகள் வழங்குதல்,போன்ற சலுகைகளை வழங்கி அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மாணவர்களை குலக்கல்வித் திட்டத்திற்கு இணையாக கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்தை  தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இந்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் கிராமப்புறங்களில் படித்து வரும் கிராம  மாணவர்களின் உடைய மருத்துவ கனவை கலக்கும் நோக்கில் செயல்படும் பாஜக அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடம் வழங்க வேண்டும் என்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக மாவட்ட தலைவர் ஆறுமுகம்,செயலாளர் ஜான்வின்சென்ட், மாவட்ட பொருளாளர் ராஜா நகர செயலாளர் பகவதி ஒன்றியத் தலைவர் ராமர் மற்றும் தோழமை இயக்கங்களான திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் இரணியன் செயலாளர் நல்லதம்பி ஆதித்தமிழர் பேரவை சுப்பிரமணி திராவிட கழகம் அருண்குமார் தமிழ் புலிகள் கட்சி இரணியன் ஆதி தமிழர் கட்சி ராஜா மற்றும்  சேட்,ஹரிகரன், அப்பாஸ்,அக்குபாய்,  ஐயப்பன்,சையது, போன்றோர் கலந்து கொண்டனர்.மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக அருண்குமார் தலித் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது ஆனால் தமிழக அரசு ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டின் நடைபெறவில்லை என்று பொய்யான தகவலை பரப்பி வருகின்றது.இது கண்டிக்கத் தக்கவை மேலும் சமீப காலமாக தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் நபர்களில் யார் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களை கொலை செய்வது வழக்கமாக இருந்து வருகின்றது. எனவே தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து சாதி மறுப்பு திருமணம் செய்யும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் சாதி ஆணவ படுகொலை எங்கும் நடைபெறாமல் இருக்க கடுமையான சட்டங்களை இயற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக நகர தலைவர் ஹக்கீம் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்..