குன்றத்தூர் மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி

சென்னை குன்றத்தூர்  அடுத்த இரண்டாம்கட்டளை பகுதியில் உள்ள மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  பதினான்காம் ஆண்டின் முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரியின்  துணை தலைவர் மெர்ஸி பிளாரன்ஸ் அவர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்சியை துவங்கி வைத்தனர். இதில் நெரிப்பில்லாமல் சமைக்கும்  உணவுகள் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. பிறகு மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. இறுதியாக சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களின் கடமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். இதில் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.