வேப்பூர் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

வேப்பூர் அருகிலுள்ள சிறுநெசலூர் ஊராட்சியில் நேற்றுமுன்தினம் வீடு தீயில் கருகியது தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கினார்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சிறுநெசலூர்  கிராமத்தில் நேற்று முன்தினம் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. சிறுநெசலூர் கிராமத்தில் வசிக்கும் பரந்தாமன் என்பவர் கேரளா மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கண்ணகி இதே ஊரில் கூலி வேலைக்கு சென்று விட்டார் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கண்ணகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் கசிவினால் தீப்பிடித்து எரிந்தது தீ விபத்தில் உயிரிழந்த கண்ணகிக்கு வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல் முன்னிலையில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, வேப்பூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.