கடலூரில் நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
 

கடலூரில் நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பாக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் ஜி ஆர் ஹோட்டலில் நடைபெற்றது. முன்னதாக கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மரக்கன்றுகளை நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் சங்க மாநில தலைவர் குமார்  நட்டார். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து அவர்களுக்கு பொன்னாடை போற்றி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் யூனியனில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ், இலவச மருத்துவ சிகிச்சை இலவச கல்வி,  ஓய்வூதியத்திட்டம் வழங்குதல். போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில் அன்பன் சிவா, சங்கர், ராஜன் ,குமார் ,முருகானந்தம் ,முனைவர் ராஜமச்சேந்திர சோழன், ஆசிரியர் ரவி முற்றும் புதிய உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.