சிறுகரம்பலூர் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுகரம்பலூரில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடிமாத பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழா மற்றும் ஆடி பண்டிகை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.  இவ்விழாவில் பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் ஊற்றும் விழாவும் நடைபெற்றது.