கோபி லக்கம்பட்டி பேருராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்

ஈரோடு மாவட்டம் ,கோபி தாலுகாவுக்கு உட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாக கட்டிடத்தில் அம்மா திட்ட முகாம் கோபி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆசியா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து இருபத்தைந்து மனுக்கள் பெறப்பட்டு 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் கோபி நில வருவாய் ஆய்வாளர் சந்திரன்,லக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடராஜ், சத்தியமூர்த்தி விஜயராஜன், சீரங்கன், முனி ரத்தினம், ஷாலினி, லக்கம்பட்டி முன்னாள் சேர்மன் வேலுமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் என்.டி.குறிஞ்சி நாதன் பேரூர் கழகச் செயலாளர் கே.ஏ. ஈஸ்வர மூர்த்தி விவசாய அணி செயலாளர் என்.ஆர் ராஜன் இலக்கிய அணி தலைவர் டி.சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்