திட்டக்குடியில் பக்ரீத் பண்டிகை முஸ்லிம்கள் தொழுகை

திட்டக்குடியில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை 7.30  மணி அளவில் சிறப்பு தொழுகை நடந்தது. அதில் ஏராளமான முஸ்லிம்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் சலீம் பாய், நஜிருல்லாஷ் மிஸ்பாஷி சிறப்புரையாற்றினார் பின்பு தொழுகையை தொடங்கி வைத்தார். தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது ஒருங்கிணைத்தார். முத்தவல்லி ஷாஜியார், சலீம், அல்லாஹ் ஜான் பாஷா, நகரச் செயலாளர் அம்சா முகமது ,ஒன்றிய நிர்வாகி அமானுல்லா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முஸ்லிம் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.